ப்ரித்விராஜ், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘காப்பா’ - மோஷன் போஸ்டர் வெளியீடு
வேணு இயக்கத்தில் உருவாகும் ‘காப்பா’ படத்தில் ப்ரித்விராஜ், மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
‘முன்னறியிப்பு’, ‘கார்பன்’, ‘ஆணும் பெண்ணும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேணு. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘காப்பா’. இதில் ப்ரித்விராஜ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். அவர்களுடன் அன்னா பென், ஆசிஃப் அலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ஆர்.இந்துகோபாலன் எழுதியுள்ளார்.
இப்படம் குறித்த அறிமுக டீசரை ப்ரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மோகன்லால், மம்முட்டி ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடைசியாக ப்ரித்விராஜ், ரோஷன் மேத்யூ நடிப்பில் வெளியான ‘குருதி’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
