விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்?

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்?
Updated on
1 min read

'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தெலுங்கில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நீண்ட நாட்களாகப் பேச்சு வார்த்தையில் படக்குழு ஈடுபட்டு வந்தது. தற்போது அதில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்துப் படக்குழுவினர் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in