பெர்லின் விழாவில் ஓட்டால் மலையாள படத்துக்கு விருது

பெர்லின் விழாவில் ஓட்டால் மலையாள படத்துக்கு விருது
Updated on
1 min read

2016ம் ஆண்டு பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான பளிங்குக் கரடி விருதை 'ஓட்டால்' மலையாளம் படம் வென்றிருக்கிறது.

ஜெயராஜ் ராஜசேகரன் நாயர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாள படம் 'ஓட்டால்'. இது ஆண்டன் செக்காவ் எழுதிய 'வனகா' என்ற சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வயதான மீனவருக்கும் அவருடைய பேரனுக்கும் இடையே நடக்கும் கதையே இப்படத்தின் மையக்கரு.

இயக்குநர் ஜெயராஜ் இதற்கு முன்னர் பிரபலமான கதைகளை மையப்படுத்தி படங்களை இயக்கி இருக்கிறார். ஷேக்ஸ்பியரின் 'ஒத்தல்லோ' மற்றும் 'ஆண்டனி & கிளியோபட்ரா' ஆகியவற்றை மையப்படுத்தி படங்களை இயக்கி இருகிறார்.

'ஜெனரேஷன் கே+ பளிங்குக் கரடி விருதை வென்றிருக்கிறது 'ஓட்டால்' திரைப்படம்' என்று பெர்லின் திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக இந்தியப் படங்கள் இந்த விருதை வென்றிருக்கிறது. 2014ம் ஆண்டு 'கில்லா' மற்றும் 2015ம் ஆண்டு 'தனக்' ஆகிய படங்கள் இந்த விருதை வென்றன.

ஏற்கனவே 'ஓட்டால்' திரைப்படம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் தேசிய விருதை பெற்றிருக்கிறது. மேலும், 20வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் அனைத்து முக்கியமான விருதுகளையும் இப்படம் வென்றிருப்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in