

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘777 சார்லி’ கன்னடப் படத்தை தமிழில் மொழி மாற்றி வெளியிடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதன் நாயகன் ரக்ஷித் ஷெட்டி, தற்போது ‘ரிச்சர்ட் அந்தோணி’ என்ற படத்தை எழுதி, இயக்கி, நடிக்கிறார். தமிழில் நேரடியாக தயாராகும் இப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.