மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணையும் 12த் மேன்

மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணையும் 12த் மேன்
Updated on
1 min read

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ள படத்துக்கு '12த் மேன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

மோகன்லால் - ஜீத்து ஜோசப் இருவருமே 'த்ரிஷ்யம்' மற்றும் 'த்ரிஷ்யம் 2' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்தக் கூட்டணியின் படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இந்தப் படத்துக்கு '12த் மேன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

அனுஸ்ரீ, அதிதி ரவி, லியோனா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், பிரியங்கா நாயர், ஷிவதா, சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ப்ரோ டாடி' படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் மோகன்லால்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in