Published : 23 Feb 2021 13:01 pm

Updated : 23 Feb 2021 13:01 pm

 

Published : 23 Feb 2021 01:01 PM
Last Updated : 23 Feb 2021 01:01 PM

விஜய் சேதுபதி படங்களுக்கு வரவேற்பு: 'சூப்பர் டீலக்ஸ்' தெலுங்கு டப்பிங் உரிமை விற்பனை

super-deluxe-in-telugu

சென்னை

தெலுங்கில் விஜய் சேதுபதி படங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பால் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை விற்பனையாகியுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், தங்களுடைய பேட்டிகளில் கூட 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பைக் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை விற்பனையாகியுள்ளது. இதனை சித்திஷ்வரா வைஷ்ணவி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தெலுங்கில் விஜய்யுடன் விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்' மற்றும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த 'உப்பெனா' ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால், விஜய் சேதுபதிக்கு என்று தனியாக ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனை முன்வைத்தே 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

விஜய் சேதுபதிவிஜய் சேதுபதிக்கு வரவேற்புசூப்பர் டீலக்ஸ்சூப்பர் டீலக்ஸ் தெலுங்கு உரிமைதியாகராஜன் குமாரராஜாசமந்தாஃபகத் பாசில்காயத்ரியுவன்One minute newsVijay sethupathiSuper deluxeSuper deluxe in teluguSamanthaFahad fazilGayathriYuvan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x