முதல் நாள் வசூலில் சாதனை புரிந்த உப்பெனா

முதல் நாள் வசூலில் சாதனை புரிந்த உப்பெனா
Updated on
1 min read

முதல் நாள் வசூலில் பெரும் சாதனை புரிந்துள்ளது 'உப்பெனா' திரைப்படம்.

நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'உப்பெனா'. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நேற்று (பிப்ரவரி 12) வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படத்துக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் நாள் வசூல் தொகையில் பங்குத் தொகையாக 10 கோடிக்கு அதிகமாகக் கிடைத்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு நடிகரின் முதல் படத்துக்கு இந்தளவுக்குப் பெரிய வசூல் கிடைத்திருப்பது தெலுங்கு திரையுலகில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டுமே வைத்து, ட்விட்டர் தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிலர் மீம்ஸ்களாகவும் அதை உருவாக்கி வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in