Published : 30 Jan 2021 07:40 PM
Last Updated : 30 Jan 2021 09:40 PM
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'வக்கீல் சாப்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிங்க்'. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அடுத்ததாக, பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 'வக்கீல் சாப்' படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இன்னொரு புறம் 'பிங்க்' படமே நாயகிகளை முன்னிலைப்படுத்தித் தான், டீஸரில் அவர்களையே காணுமே என்ற கிண்டலும் எதிரொலித்தது. மீண்டும் திரையுலகிற்குத் திரும்பி பவன் கல்யாண் நடித்துள்ள படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டுத் தேதியை அறிவித்து வரும் நிலையில், 'வக்கீல் சாப்' திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.
The POWER is set to unleash on the BIG SCREEN
— Sri Venkateswara Creations (@SVC_official) January 30, 2021
Power Star @PawanKalyan’s #VakeelSaab in theatres from April 9, 2021.#VakeelSaabOnApril9th#SriramVenu @shrutihaasan @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @BoneyKapoor @MusicThaman pic.twitter.com/rPj7LxLjJi
Sign up to receive our newsletter in your inbox every day!