

எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
குடியரசு தினத்தை முன்னிட்டு, 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் கடந்த ஆண்டு மறைந்த, இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என் அன்புச் சகோதரர் எஸ்.பி.பாலுவுக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு உரிய கவுரவம் இது. ஆனால், அடைப்புக்குறிக்குள் இறப்புக்குப் பின் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டு வருத்தமடைந்தேன். அவர் கைகளால் இந்த விருதைப் பெற்றிருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.