அப்பா தயாரிப்பாளர், நண்பர் இயக்குநர், பிடித்த நடிகர்: கீர்த்தி சுரேஷ் உற்சாகம்

அப்பா தயாரிப்பாளர், நண்பர் இயக்குநர், பிடித்த நடிகர்: கீர்த்தி சுரேஷ் உற்சாகம்
Updated on
1 min read

அப்பா தயாரிப்பில், நண்பர் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்து கீர்த்தி சுரேஷ் உற்சாகமடைந்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய தந்தை சுரேஷ் குமார் மலையாளத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், திரைப்படக் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் தயாரித்த பல படங்களில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2017-ம் ஆண்டு வெளியான 'மேட்ச் பாக்ஸ்' படத்துக்குப் பிறகு சுரேஷ் குமார் படங்கள் எதுவும் தயாரிக்கவில்லை. தற்போது புதிய படமொன்றை அறிவித்துள்ளார். இவருடைய ரேவதி கலாமந்தீர் நிறுவனம் தயாரிப்பில் 'வாஷி' என்ற புதிய படம் உருவாகிறது. இந்தப் படத்தை விஷ்ணு ராகவ் இயக்க, டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:

"நீங்கள் நினைப்பதை விட என் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு படம். தன் தந்தை தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதுதான் ஒரு பெண் குழந்தையின் கனவாக இருக்கும். ஆனால், இது எளிதாகக் கிடைக்கும் ஒரு விஷயம் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால், நிச்சயமாக எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை.

சரியான இடத்துக்கு வருவதற்கு 7 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட 'வாஷி' திரைப்படத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். எனது பால்ய கால நண்பன் விஷ்ணு ராகவ் இந்த முறை இயக்குநராக என்னுடன் பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்குப் பிடித்த மிகச்சிறந்த நடிகருமான டோவினோ தாமஸ் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்".

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in