நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
Updated on
1 min read

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே சம்பந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கரோனா தொற்றிலிருந்து சில நாட்களுக்கு முன்னர் குணமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். இவரது மருமகன் கைதப்ரம் தாமோதரன் பாடலாசிரியராக உள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன் கண்ணூர் மருத்துவமனையில் உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் தீவிரமாக இருந்தது. அப்போது அவருக்குக் கரோனா தொற்று இல்லை என்றே பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

நிமோனியா பிரச்சினை தீர்ந்தபிறகு மருத்துவமனையிலிருந்து உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்முறை அவருக்குக் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், தொற்று நீங்கிய பிறகு உடல்நிலை தேறினார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று செய்த பரிசோதனையில் உன்னிகிருஷ்ணனுக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவர் குணமடைந்த நிலையில், வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலனில் பாதிப்பு ஏற்பட, கண்ணூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in