

ருத்ரமாதேவி திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார்.
தெலங்கானா பின்னணியில் காகதீய ஆட்சி காலத்தில் நடந்த வரலாற்று கதை ருத்ரமாதேவி. இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், நாசர், அல்லு அர்ஜுன், ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இக்கதையை குணசேகர் தயாரித்து இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் குணசேகர் மற்றும் படக்குழுவினர் ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவை சந்தித்து, திரைப் படத்தை காண அழைப்பு விடுத்தனர். அப்போது முதல்வர், தெலங்கானாவில் 13-ம் நூற்றாண் டில் வாழ்ந்த வீர மங்கையான ருத்ரமாதேவியின் உண்மை கதையை காண ஆவலாக உள்ளேன் என்றும், தெலங்கானாவின் வரலாற்றை நினைவு கூரும் வகையில் திரைக்கதையாக எடுக்கப்பட்ட ருத்ரமாதேவிக்கு வரி விலக்கு அளிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.