நம்பகமான திரைப்படங்களில் நடிப்பதே இலக்கு: ஆனந்த் தேவரகொண்டா

நம்பகமான திரைப்படங்களில் நடிப்பதே இலக்கு: ஆனந்த் தேவரகொண்டா
Updated on
1 min read

நம்பகமான திரைப்படங்களில் நடிப்பதே என்னுடைய இலக்கு என நடிகர் ஆனந்த் தேவரகொண்டா கூறியுள்ளார்.

அறிமுக இயக்குநர் வினோத் ஆனந்தோஜு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் ‘மிடில் கிளாஸ் மெலடீஸ்’. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இளைய சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக அறிமுகமானார். வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடித்திருந்தார். இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனந்த் தேவரகொண்டாவின் நடிப்பும் பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு ஆனந்த் தேவரகொண்டா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பெரும்பான்மை பார்வையாளர்களை அடைவதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். ஒரு படம் பார்க்கிறோம் என்றால் அப்படம் நம்மை மகிழ்விக்க வேண்டும். நண்பர்களுடன் சென்று சிரித்து ரசித்துவிட்டு வர வேண்டும். அது ‘பிஃபோர் சன்ரைஸ்’ போன்ற காதல் மென் நகைச்சுவைப் படமாகவும் இருக்கலாம். அப்படவரிசையின் நோக்கமே நம்மை வேறுபட்ட வழியில் மகிழ்விப்பதாக இருந்தது.

சில குறிப்பிட்ட வகை திரைப்படங்களில் நான் நடிக்கப் போவதில்லை. நம்பகமான திரைப்படங்களில் நடிப்பதே என்னுடைய இலக்கு. நான் ஒன்றும் அசகாய சூப்பர் ஸ்டார் அல்ல. இப்போது என்னால் அதுபோன்ற விஷயங்களைச் செய்ய முடியாது. அதற்கு முன்பு 10 அல்லது 15 படங்களிலாவது நான் நடிக்க வேண்டும். ஆனால், நான் அவ்வளவெல்லாம் இப்போது யோசிக்கவில்லை. தற்போது அடுத்த படத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்''.

இவ்வாறு ஆனந்த் தேவரகொண்டா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in