நடிகையாக அறிமுகமாகும் ஆஷா சரத் மகள்

நடிகையாக அறிமுகமாகும் ஆஷா சரத் மகள்
Updated on
1 min read

நடிகை ஆஷா சரத்தின் மகள் உத்தரா நடிகையாக அறிமுகமாகிறார்.

‘த்ரிஷ்யம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஆஷா சரத். துபாயில் வசித்து வரும் இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர். பின் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

தற்போது ‘த்ரிஷ்யம் 2’, ‘ரெஸ்ட் இன் பீஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், ‘கெட்டா’ என்கிற திரைப்படத்திலும் ஆஷா சரத் நடிக்கிறார். இதில் அவரது மகள் கதாபாத்திரத்தில், நிஜத்தில் அவரது மகளான உத்தராவே நடிக்கிறார். இது அவரது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரா பொறியியல் பட்டதாரி. கல்லூரி நாட்களிலிருந்தே தனக்கு நடிக்க ஆசை இருந்ததாகக் கூறும் உத்தரா, அப்போது மிகக் குறைந்த வயது என்பதால் நடிப்பதைத் தள்ளிப்போட்டதாகக் கூறுகிறார்.

உத்தரா அயல் நாட்டில் மேல்படிப்பு படிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், கரோனா நெருக்கடியால் அது தாமதமாகியிருப்பதாகவும் ஆஷா கூறியுள்ளார்.

கேரள அரசின் மாநில விருதினை இரண்டு முறை வென்ற இயக்குநர் மனோஜ் கானா, ‘கெட்டா’ படத்தை இயக்குகிறார். சமூகப் பிரச்சினையைப் பேசும் தீவிரமான கதை இது.

தன்னிடம் கதை சொல்ல வரும்போது உத்தராவை மனோஜ் பார்த்ததாகவும், அதன் பிறகே அவரை நடிக்கவைக்க மனோஜ் முடிவெடுத்ததாகவும் ஆஷா கூறியுள்ளார்.

"இரண்டு வருடங்களுக்கு முன் இந்தக் கதையைக் கேட்டேன். இன்னும் கூட மனோஜ் சொன்ன கதையின் அத்தனை விவரங்களும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த அளவுக்கு அழகான கதை. பல காரணங்களால் படம் தாமதமாகி தற்போது தொடங்கியுள்ளது" என்று ஆஷா பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in