

பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா, 2 மகள்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 4 பேரும் ஹைதரா பாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஜீவிதா மற்றும் இருமகள்களும் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நடிகர் ராஜசேகர் மட்டும் தொடர்ந்து ஐசியு வார்டில் சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து நடிகை ஜீவிதா நேற்று ஹைதராபாத்தில் கூறும்போது, "எனது கணவர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது ஐசியு வார்டில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குண மடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப் படுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.