

விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணையும் மலையாளப் படத்துக்கு '19(1)(a)' என்று பெயரிட்டுள்ளது படக்குழு.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்தாலும், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தியில் 'மாநகரம்' ரீமேக், ஆமிர் கானுடன் 'லால் சிங் சட்டா' ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாளத்தில் ஜெயராமுடன் 'மார்க்கோனி மித்தாய்' படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதற்குப் பிறகு சில வாய்ப்புகள் வந்தாலும் தேதிகள் பிரச்சினை காரணத்தால் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.
தற்போது, இயக்குநர் வி.எஸ்.இந்து கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதில் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 4) தொடுபுழாவில் தொடங்கவுள்ளது.
'19(1)(a)' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கவுள்ளது. இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியபுரியவுள்ளார்.