நடிகை மிருதுளா முரளி திருமணம்- பிரபலங்கள் வாழ்த்து

நடிகை மிருதுளா முரளி திருமணம்- பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

நடிகை மிருதுளா முரளிக்கு கொச்சியில் திருமணம் நடைபெற்றது.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை தொகுப்பாளராக அறிமுகமானவர் மிருதுளா முரளி. பின்னர் 2009ஆம் ஆண்டு ‘ரெட் சில்லீஸ்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். தமிழில் மணிவண்ணன் இயக்கிய ‘நாகராஜ சோழன் எம்ஏ,எம்எல்ஏ’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும், உதவி இயக்குநருமான நிதின் விஜய் என்பவருடன் மிருதுளா முரளிக்கு கொச்சியில் நேற்று திருமணம் நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தலால் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகை ரம்யா நம்பீசன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

நடிகை பாவனா, பாடகி சயனோரா பிலிப் உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மிருதுளா முரளி திருமண புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in