அதிக விலைக்கு விற்கப்பட்ட 'வக்கீல் சாப்' தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம்

அதிக விலைக்கு விற்கப்பட்ட 'வக்கீல் சாப்' தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம்
Updated on
1 min read

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'வக்கீல் சாப்' திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிங்க்'. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்ததாக, பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகி வருகிறது. தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு 'அஞ்ஞாதவாசி' படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகர் பவன் கல்யாணுக்கு இந்தப் படம் திரையுலகில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கி டிசம்பர் மாதம் படத்தை மொத்தமாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஜெமினி டிவி தரப்பு ரூ.16.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி வெளியீட்டுக்குப் பல தளங்கள் ஆர்வம் காட்டினாலும் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தைத் திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். எனவே, டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை. அதுவும் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in