Published : 25 Oct 2020 04:48 PM
Last Updated : 25 Oct 2020 04:48 PM

'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்

ஹைதராபாத்

'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கில், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க பவன் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டையின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி, பணிகளைத் தொடங்கியது. இதில் பிரித்விராஜ், பிஜு மேனன் கதாபாத்திரங்களில் நடிக்கப் பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன.

இறுதியாக, பிஜு மேனன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கை சாகர் கே.சந்திரா இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பிரசாத் முரேலா, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x