நானி நடிப்பில் உருவாகும் ஷியாம் சிங்கா ராய்

நானி நடிப்பில் உருவாகும் ஷியாம் சிங்கா ராய்
Updated on
1 min read

நானி நடிக்கவுள்ள புதிய படத்துக்கு 'ஷியாம் சிங்கா ராய்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

'வி' படத்தைத் தொடர்ந்து 'டக் ஜெகதீஷ்' என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. சிவா நிர்வானா இயக்கி வரும் இந்தப் படத்தில் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நானி நடிக்கவுள்ள புதிய படம் இன்று (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹாரிகா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ராகுல் சாங்கிருத்யன் இயக்கவுள்ளார்.

'ஷியாம் சிங்கா ராய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நானிக்கு நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சனு ஜான் வர்க்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in