

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின.
மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று (22.10.20) மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜா தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார்.
குழந்தையை சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்துடன் வைத்திருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் மேக்னா ராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.