Published : 13 Oct 2020 05:30 PM
Last Updated : 13 Oct 2020 05:30 PM

'ராதே ஷ்யாம்' அப்டேட்: பூஜா ஹெக்டே கதாபாத்திர லுக் வெளியீடு

ஹைதராபாத்

பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு 'ராதே ஷ்யாம்' படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இத்தாலி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 80% காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு.

இதனிடையே, இன்று (அக்டோபர் 13) பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருடன் நடித்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

'ராதே ஷ்யாம்' படக்குழுவினரோ, பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளுக்கு பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 'ப்ரேரணா' என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாலியில் முக்கியமான காட்சிகள் படப்பிடிப்புக்குப் பிறகு, மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x