எஸ்பிபி மறைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை: மகேஷ் பாபு உருக்கம்

எஸ்பிபி மறைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை: மகேஷ் பாபு உருக்கம்
Updated on
1 min read

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை என்று மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது ஆத்மார்த்தமான குரலுக்கு ஈடாக எதுவும் கிடையாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சார். அவரது குடும்பத்துக்கு மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதல்கள்"

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in