ஒருவருடைய பயோபிக்கில் நடிக்க அவருடைய வாழ்வைப் பற்றிய புரிதல் வேண்டும்: சுதீர் பாபு

ஒருவருடைய பயோபிக்கில் நடிக்க அவருடைய வாழ்வைப் பற்றிய புரிதல் வேண்டும்: சுதீர் பாபு
Updated on
1 min read

‘சிவா மனசுலோ ஷ்ருதி’, ‘ப்ரேம கதா சித்ரம்’, ‘பாகி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுதீர் பாபு. சமீபத்தில் நானியுடன் இணைந்து ‘வி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது பிரபல பாட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலோ கோபிசந்த் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ஒரு பயோபிக் படத்தில் சுதீர் பாபு நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து சுதீர் பாபு கூறியுள்ளதாவது:

''புல்லேலோ கோபிசந்தின் பயோபிக்கில் நடிக்கவுள்ளேன். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது. அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

ஒருவருடைய பயோபிக் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் அந்த மனிதருடைய வாழ்க்கையைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அவரைப் போன்ற மேனரிசங்கள் மட்டும் இருந்தால் போதாது. அந்த மனிதரின் ஆன்மா நமக்குள் நுழைந்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக நடிக்க முடியும்.

அவரோடு பல ஆண்டுகள் பயணம் செய்ததால் எனக்கு நிச்சயமாக அந்தப் பலன் உள்ளது. அதுமட்டுமின்றி பாட்மிண்டனை ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியாது. எனவே இது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது''.

இவ்வாறு சுதீர் பாபு கூறியுள்ளார்.

நடிகர் சுதீர் பாபு முன்னாள் பாட்மிண்டன் விளையாட்டு வீரர் மட்டுமின்றி புல்லேலோ கோபிசந்துடன் இணைந்து ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in