

நடிகர் சுதீப் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி பிரியாவுக்கு ரூ.19 கோடி வழங்கவும் சம்மதம் தெரிவித்துள் ளார்.
நடிகர் சுதீப் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். 'நான் ஈ' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபலமானார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'புலி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித் துள்ளார்.
இவர் 2001-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பிரியா ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். கடந்த 14 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு 11 வயதில் 'சான்வி' என்ற மகள் இருக்கிறார். இதனிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதீப் தம்பதி பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சுதீப் மற்றும் அவரது மனைவி பிரியா ராதாகிருஷ்ணன் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சுதீப் தனது விண்ணப்பத்தில், ‘‘மனைவி பிரியா ராதாகிருஷ்ணனு டன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. தனது மகள் சான்வி மனைவியோடு வாழ்வதில் ஆட்சேபம் இல்லை. மனைவிக்கும், மகளின் வளர்ப்புக்கா கவும் ஜீவனாம்சமாக ரூ. 19 கோடி வழங்குகிறேன்'' என தெரிவித்துள் ளார். இது தொடர்பாக சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பிரச்சினை களை எதிர் கொள்ளாமல் ஓட மாட்டேன். கருத்து வேறுபாடு இயல்பானது. எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது தளத்தில் பேச விரும்பவில்லை'' என பதிவிட்டுள்ளார்.