காதலியைக் கரம் பிடித்தார் ராணா: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

காதலியைக் கரம் பிடித்தார் ராணா: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

முன்னணி நடிகரான ராணா, தனது காதலி மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்து கொண்டார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரைக் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் அறிவித்தார். இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் இன்று (ஆகஸ்ட் 8) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஹைதராபாத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பால் ராமநாயுடு ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றது. தனது காதலி மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டினார் ராணா.

இந்தத் திருமண வைபவத்தில் ராணா - மிஹீகா பஜாஜ் ஆகியோரின் குடும்பத்தினரும், மிக நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் திருமணம் நடைபெற்றது. சுமார் 50 பேர் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

ராணா - மிஹீகா பஜாஜ் திருமணத்திற்கு இந்தியத் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in