அப்பா கூறிய அட்வைஸ்: ஃபகத் பாசில் பகிர்வு

அப்பா கூறிய அட்வைஸ்: ஃபகத் பாசில் பகிர்வு
Updated on
1 min read

நாயகனாக அறிமுகமானபோது அப்பா பாசில் கூறிய அட்வைஸ் குறித்து ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

2002-ம் ஆண்டு தனது அப்பா பாசில் இயக்கத்தில் நடிகராக அறிமுகமானவர் ஃபகத் பாசில். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து, தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் ஃபகத் பாசில் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த அளவுக்கு வித்தியாசமான, எளிமையான கதைகள் பலவற்றில் நாயகனாக நடித்துள்ளார் ஃபகத் பாசில்.

பேட்டிகள், அறிக்கைகள் என அனைத்திலிருந்துமே ஒதுங்கியே இருக்கும் ஃபகத் பாசில், நீண்ட நாட்கள் கழித்து பேட்டியொன்று அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "எல்லோரும் உங்களை அவர்கள் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்களே" என்ற கேள்விக்கு ஃபகத் பாசில் கூறியிருப்பதாவது:

"2002-ம் ஆண்டு எனது அப்பா என்னை நடிக்க அழைத்தபோது நான் தயாராக இல்லை. ஆனால், ஒட்டுமொத்த உலகமுமே நான் நடிக்க வேண்டும் என்றது. 10 வருடங்கள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்தபோது, நான் தயாராக இருந்தேன். ஆனால், ஒட்டுமொத்த உலகமும், வேண்டாம், ஏற்கெனவே முயன்று அது நடக்கவில்லையே என்றது. எனது அப்பாதான் என்னை ஆதரித்த ஒரே நபர். இயக்குநர்கள் உன் மேல் காதல் வயப்பட வேண்டும் என்றார் அவர். அது மிகவும் எளிது".

இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in