இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்

இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
Updated on
1 min read

அல்லு அர்ஜுன் நடித்த ‘சரைநோடு’ திரைப்படம் யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

போயபதி சீனு இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சரைநோடு’. அல்லு அர்ஜுன், ரகுல் ப்ரீத் சிங், கேதரின் தெரசா, உள்ளிட்டோர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு யூ-டியூபில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இன்று வரை இப்படத்தை 30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. யூ-டியூபில் முதல்முறையாக 30 கோடி முறை பார்க்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.

இதனை கொண்டாடும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #Sarrainodu300MillionViews என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய் சேதுபதி, ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in