நடிகர் துருவா சர்ஜாவுக்கு கரோனா தொற்று

நடிகர் துருவா சர்ஜாவுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான துருவா சர்ஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னடத்தில் 2012-ம் ஆண்டு 'அதூரி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் துருவா சர்ஜா. அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தவர், இறுதியாக 'பொகுரு' படத்தில் நடித்துள்ளார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இதனிடையே தற்போது துருவா சர்ஜா மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக துருவா சர்ஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் நலமாகத் திரும்புவோம் என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியும். எங்கள் அருகாமையில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜெய் ஆஞ்சநேயா"

இவ்வாறு துருவா சர்ஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in