கணவரை அறிமுகப்படுத்திய நிஹாரிகா

கணவரை அறிமுகப்படுத்திய நிஹாரிகா
Updated on
1 min read

தான் திருமணம் செய்யவுள்ள கணவர் குறித்த தகவலைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் நிஹாரிகா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிஹாவிகா. தற்போது தமிழில் அசோக் செல்வன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது நிஹாரிகாவுக்கு அவரது வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளனர். தனக்குப் பார்த்திருக்கும் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் இதனை உறுதிப்படுத்தினார் நிஹாரிகா. ஆனால் கணவர் யாரென்று தெரிவிக்கவில்லை. இதனிடையே, தனக்கு வரப்போகும் கணவருடன் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நிஹாரிகா.

இவரது கணவர் பெயர் சைத்தன்யா. இவர் ஹைதராபாத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். குண்டூர் பகுதி ஐஜியின் மகன் தான் சைத்தன்யா என்பது குறிப்பிடத்தக்கது. நிஹாரிகா - சைத்தன்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் எப்போது என்பது எதுவும் இன்னும் முடிவாகவில்லை. அடுத்தாண்டு திருமணம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Mine @chaitanya_jv

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in