காதலனை அறிமுகப்படுத்திய சுபா புஞ்சா

காதலனை அறிமுகப்படுத்திய சுபா புஞ்சா
Updated on
1 min read

கன்னட நடிகை சுபா புஞ்சா இந்த வருடம் டிசம்பர் மாதம் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு 'மச்சி' தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுபா புஞ்சா. அதனைத் தொடர்ந்து 'திருடிய இதயத்தை', 'ஒரு பொண்ணு ஒரு பையன்', 'சுட்ட பழம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்து வந்தார். 2008-ஆம் ஆண்டு 'மொக்க மனசு' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணச் செய்தியை சுபா அறிவித்துள்ளார். காதலர் சுமந்த் பில்லவா என்பவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சுபா பகிர்ந்துள்ளார்.

"நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் சுமந்த் பில்லவாவின் புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாள் தாமதமாக நான் இதைப் பகிர்கிறேன். ஊரடங்கு முடிந்து, அநேகமாக டிசம்பர் மாதம் எங்கள் திருமணம் நடக்கும்" என்று பகிர்ந்துள்ள சுபா, தனது காதலருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பகிர்வுக்குப் பல்வேறு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in