அனுஷ்காவின் அடுத்த படம்

அனுஷ்காவின் அடுத்த படம்
Updated on
1 min read

மீண்டும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிசப்தம்'. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கையும் செய்யப்பட்டுவிட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு அனுஷ்காவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

தமிழில் சூர்யாவுடன் 'சிங்கம் 3' படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தன்னுடைய அடுத்த தெலுங்குப் படத்தை முடிவு செய்துள்ளார் அனுஷ்கா. இதனை 'பாகமதி' படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தை மகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் முன்னதாகவே முடிந்துவிட்டதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் முறையாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in