தன்னை வெறுப்பவர்களுக்கு சமந்தா பதில் 

தன்னை வெறுப்பவர்களுக்கு சமந்தா பதில் 
Updated on
1 min read

தன்னை வெறுப்பவர்களுக்கு ட்விட்டர் கேள்வி பதிலில் பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகு கமர்ஷியல் படங்களில் அல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்த கரோனா ஊரடங்கில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை. மேலும், சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சை உருவானது. அந்தப் பதிவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.

இதனிடையே, நேற்று (மே 30) #AskSam என்ற ஹேஷ்டேக்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து வந்தார் சமந்தா. அதில் ரசிகர் ஒருவர், "உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமந்தா பதில் கூறியிருப்பதாவது:

"உங்களின் துரதிர்ஷ்டம். நீங்கள் எனக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறீர்கள் என்பதை உணரவில்லை. பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன. அவமானங்கள் என்னைச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே நன்றி".

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in