புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம்: மகேஷ் பாபு

புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம்: மகேஷ் பாபு
Updated on
1 min read

புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம் என்று நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து தெலுங்குத் திரையுலகில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து, தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ச்சியாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மகேஷ் பாபு. தற்போது படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்புவது குறித்து மகேஷ் பாபு கூறியிருப்பதாவது:

"நாம் சகஜ நிலைக்குத் திரும்புகிறோம். மெதுவாக, ஆனால் கட்டாயமாக. இப்படியான சூழலில் முகக்கவசம் அவசியம். நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். நம்மையும், மற்றவர்களையும் பாதுகாக்க நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயல் அதுவே. அது பார்க்க வித்தியாசமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் இந்த நேரத்தில் தேவை.

நாம் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். புது சகஜ நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம். மீண்டும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம். முகக்கவசம் அணிவது எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு?"

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவோடு அவர் முகக்கவசம் அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, சமூக விலகலுடன், அச்சத்தை உருவாக்குபவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று மகேஷ் பாபு பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in