உங்கள் வாழ்த்து இன்னும் ஊக்கப்படுத்தும்: கமலுக்கு மோகன்லால் நன்றி

உங்கள் வாழ்த்து இன்னும் ஊக்கப்படுத்தும்: கமலுக்கு மோகன்லால் நன்றி
Updated on
1 min read

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமலுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நேற்று (மே 21) தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருப்பதால் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று மலையாளத் தொலைகாட்சிகள் அனைத்திலுமே மோகன்லால் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் மோகன்லாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மோகன்லாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்தாக கமல் தனது சமூக வலைதளப் பதிவில், "அன்புள்ள மோகன்லால், உங்கள் முதல் படத்திலிருந்தே உங்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு தருணத்திலும் உங்களை எதிர்ப்பவர்களோடு இருக்கும் உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் உங்களோடு சேர்ந்து பணிபுரிகையில் இன்னும் அதிகமாக உங்களை நேசித்தேன். நீடுழி வாழ்க என் இளைய சகோதரா" என்று குறிப்பிட்டார்.

அவருக்கு நன்றி கூறும் விதமாக மோகன்லால், "அன்பார்ந்த கமல் அவர்களே, உங்கள் கனிவான வார்த்தைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நடிகர், நிகரற்ற அர்ப்பணிப்பு மற்றும் திறமை கொண்டவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வருவது நிறைவைத் தருகிறது. இது எனது பயணத்தில் முன்னே செல்ல இன்னும் என்னை ஊக்கப்படுத்தும். நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in