'நிசப்தம்' டிஜிட்டல் வெளியீடு: கோனா வெங்கட் பதிவால் எழும் குழப்பம்

'நிசப்தம்' டிஜிட்டல் வெளியீடு: கோனா வெங்கட் பதிவால் எழும் குழப்பம்
Updated on
1 min read

'நிசப்தம்' படத்தின் டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக, கோனா வெங்கட் ட்வீட்டால் மீண்டும் குழப்பம் உருவாகியுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தக் கரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டது.

தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை அமேசான் ப்ரைம் நிறுவனம், நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு கைப்பற்றி வருகிறது. அந்த வரிசையில் தெலுங்கிலிருந்து முதல் படமாக 'நிசப்தம்' படத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதால் ஆந்திரா - தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 'நிசப்தம்' டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க பெரும் விவாதமாக மாறியுள்ளது.

தற்போது படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட்டின் ட்வீட்டால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் "பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் நிறைய கனவுகளோடு திரைத்துறைக்கு வந்துள்ளோம். எங்களுடைய வேலைகளுக்கு ஆடியன்ஸ் கொடுக்கும் வரவேற்பே எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகும். அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது. சினிமா தியேட்டர்கள் தான் சினிமாவின் அர்த்தம். அதற்குத் தான் நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் கோனா வெங்கட்.

இந்த ட்விட்டர் பதிவால் படம் அமேசான் வெளியீடா அல்லது திரையரங்க வெளியீடா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in