கரோனா பின்னணியில் சம்பூர்ணேஷ் பாபுவின் அடுத்த படம்

கரோனா பின்னணியில் சம்பூர்ணேஷ் பாபுவின் அடுத்த படம்
Updated on
1 min read

கரோனா பின்னணியில் சம்பூர்ணேஷ் பாபுவின் அடுத்த படம் தயாராகி வருகிறது.

தெலுங்கில் ஸ்பூஃப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் சம்பூர்ணேஷ் பாபு. இவரது 'ஹ்ருதய கலேயம்', 'கொப்பரி மாடா' ஆகிய படங்களுக்கு மொழி கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். இவருடைய படங்களின் காட்சிகள் அனைத்துமே இணையத்தில் அடிக்கடி வைரலாகி பரவிவரும். அந்தளவுக்கு இவர் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டாலும், இவருடைய ஸ்பூஃப் படங்களுக்கு என ரசிகர்களுக்கும் அதிகரித்து வருகிறார்கள்.

இன்று (மே 9) சம்பூர்ணேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நாளில் அவருடைய அடுத்தப் படம் குறித்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் மருத்துவத் துறை பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படம் என்றும், இதில் கரோனா கிருமி தொற்றும் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் வுஹான் நகரில் கடைசியாக படம்பிடிக்கப்பட்ட படம் இது என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். வுஹான் நகரிலிருந்து தான் கரோனா தொற்று ஆரம்பமானதாகக் கூறப்படுகிறது. நோலன் மவுலி என்பவர் இயக்கும் இந்தப் படம் ஜூலை 30 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக சம்பவங்கள் அனைத்தையும் ஸ்பூஃப் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in