இது ஒரு கடினமான பயணமாக இருக்கப்போகிறது: ராஜசேகர்

இது ஒரு கடினமான பயணமாக இருக்கப்போகிறது: ராஜசேகர்
Updated on
1 min read

இது ஒரு கடினமான பயணமாக இருக்கப்போகிறது என்று தெலுங்கு நடிகர் ராஜசேகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ஊரடங்கை நீட்டித்திருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், நலிந்தவர்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த ஊரடங்கு நீட்டிப்பிற்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"மோடிஜி இதைவிடச் சிறப்பான விஷயத்தைச் சொல்லியிருக்க முடியாது. ஊரடங்கு நீட்டிப்பும் சமூக விலகலைப் பின்பற்றுவதும் மட்டுமே கோவிட்-19 வைரஸை விரட்ட ஒரே வழி. இது ஒரு கடினமான பயணமாக இருக்கப்போகிறது. ஆனால் நாம் ஒருவரையொருவர் உதவி செய்து ஆதரிக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவோம்".

இவ்வாறு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in