கரோனா அச்சம்: அஜய் தேவ்கான் லுக் வெளியீட்டை தள்ளி வைத்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு

கரோனா அச்சம்: அஜய் தேவ்கான் லுக் வெளியீட்டை தள்ளி வைத்த 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு
Updated on
1 min read

கரோனா அச்சத்தால், அஜய் தேவ்கான் லுக் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தில் அவரது லுக்கும் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை வைத்து பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 2) அஜய் தேவ்கனின் பிறந்த நாளாகும். இதற்காக பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அஜய் தேவ்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்தாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பெரிய மனம் கொண்ட மனிதருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அஜய் தேவ்கன் சார். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ஒரு அங்கமாக நீங்கள் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். முதல்நாள் உங்களோடு பணிபுரிந்தது மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது உங்களுக்கு அப்படியே இருந்திருக்கும் என்று நம்புகிறோம். மற்றொரு சிறப்பான ஆண்டாக அமையட்டும்.

அஜய் தேவகன் சாரின் பிறந்தநாளில் உங்கள் அனைவருக்கும் ஒரு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்ய விரும்பினோம். ஆனால் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையால் இசை மற்றும் டிஐ பணிகளில் தடங்கள் ஏற்பட்டுவிட்டது. ஊரடங்கு முடிந்ததும் தொடர்ந்து அப்டேட்களை உங்களுக்கு அளிக்கிறோம். காத்திருங்கள்"

இவ்வாறு 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in