மோசமான குற்றங்களுக்கு விரைவான தீர்ப்புகள் வேண்டும்: மகேஷ் பாபு வேண்டுகோள்

மோசமான குற்றங்களுக்கு விரைவான தீர்ப்புகள் வேண்டும்: மகேஷ் பாபு வேண்டுகோள்
Updated on
1 min read

மோசமான குற்றங்களுக்கு விரைவான தீர்ப்புகள் வேண்டும் என்று நடிகர் மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் நடந்த வழக்கில் இறுதியாக இன்று (மார்ச் 20) காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது தொடர்பாக, தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனாக மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நீண்ட நாள் காத்திருப்பு ஆனால் நீதி கிடைத்துவிட்டது. நிர்பயா வழக்குத் தீர்ப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது. தொடர்ந்து துவண்டுவிடாமல் போராடிய நிர்பயாவின் பெற்றோருக்கும், வழக்கறிஞர்களுக்கும் என் வணக்கங்கள். நமது நீதித்துறைக்கு என் மரியாதை. மோசமான குற்றங்களுக்கு இன்னும் கூட கடுமையான சட்டங்களும், விரைவான தீர்ப்புகளும் இருக்க வேண்டும்”

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in