'சைஸ் ஜீரோ' இயக்குநருடன் அனுஷ்கா திருமணம்?

'சைஸ் ஜீரோ' இயக்குநருடன் அனுஷ்கா திருமணம்?
Updated on
1 min read

'சைஸ் ஜீரோ' இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடி உடன் அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவருக்குத் திருமணம் என்று பலமுறை செய்திகள் வெளியாகி, அதை அனுஷ்காவும் மறுத்துள்ளார். இப்போது மீண்டும் அனுஷ்காவுக்குத் திருமணம் என்று செய்திகள் உலவ தொடங்கியுள்ளன.

2015-ம் ஆண்டு ஆர்யா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் 'சைஸ் ஜீரோ'. தமிழில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரகாஷ் கோவேலமுடி.

இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியில் ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் நடித்த 'ஜட்ஜ்மெண்டல் ஹை க்யா' படத்தை இயக்கினார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, 'சைஸ் ஜீரோ' படத்தின் போதே பிரகாஷ் கோவேலமுடிக்கும் அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி தொடர்பாக திரையுலகினர் மத்தியில் விசாரித்த போது, "இருவருமே அண்ணன் - தங்கச்சி அளவில் தான் பழகி வருகிறார்கள். யாரோ தேவையில்லாமல் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளார்கள்" என்று தெரிவித்தார்கள். ஏற்கனவே, பிரகாஷ் கோவேலமுடி திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது நினைவு கூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in