பவன் கல்யாணுக்கு நாயகியாகும் ஸ்ருதிஹாசன்

பவன் கல்யாணுக்கு நாயகியாகும் ஸ்ருதிஹாசன்
Updated on
1 min read

'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார் பவன் கல்யாண். ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகத் தயாராகி வருகிறது படக்குழு. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்துள்ளனர். 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் வெளியான 'பிங்க்' ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படத்திலிருந்து 'மகுவா மகுவா' என்ற பாடல் பெண்கள் தினத்தன்று வெளியிடப்பட்டது. இதற்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமும், போனி கபூரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in