

சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு நாயகியாக நடித்த ரிச்சாவுக்கும் ஜோவுக்கும் திருமணம் முடிந்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் 'லீடர்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. அதனைத் தொடர்ந்து தனுஷுக்கு நாயகியாக 'மயக்கம் என்ன', சிம்புவுக்கு நாயகியாக 'ஒஸ்தி' ஆகிய படங்களில் நடித்தார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ரிச்சா எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை.
வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற ரிச்சா, தன்னுடன் படித்த ஜோவைக் காதலித்து வந்தார். ஜனவரி 15-ம் தேதி தன்னுடன் பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஜோவைக் காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.
தற்போது ரிச்சா - ஜோ இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
ரிச்சா - ஜோ தம்பதியினருக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இருவருமே அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.