சீன மொழியிலும் ஹிட் ஆன 'த்ரிஷ்யம்' ரீமேக்

சீன மொழியிலும் ஹிட் ஆன 'த்ரிஷ்யம்' ரீமேக்
Updated on
1 min read

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ள 'த்ரிஷ்யம்' திரைப்படம், வெளியான முதல் வார இறுதியில் வசூலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்டோர நடிப்பில் 2013-ல் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' வெளியான சமயத்தில் கேரளத்தில் வசூல் சாதனை படைத்தது. பல்வேறு விருதுகளையும் வென்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். 2017-ல் இலங்கையில், சிங்கள மொழியிலும் 'த்ரிஷ்யம்' ரீமேக் செய்யப்பட்டது.

வெளியான அனைத்து மொழிகளிலும் 'த்ரிஷ்யம்' வெற்றி பெற்றது. 2017-ம் ஆண்டு 'த்ரிஷ்யம்' படத்தின் சீன மொழி ரீமேக் உரிமையை அந்த நாட்டைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியது. தற்போது அந்தப் படம் 'ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்ட்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் இந்திய ரசிகர்களிடையே வைரலாகப் பகிரப்பட்டது.

'த்ரிஷ்யம்' படத்தின் மற்ற ரீமேக் வடிவங்களைப் போலவே சீன மொழி ரீமேக்கும் பாராட்டையும், நல்ல வசூலையும் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் மூன்று நாட்களில் 32 மில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. படத்துக்கான வரவேற்பு நன்றாக இருப்பதால், இரண்டாவது வார இறுதியிலும் இந்தப் படமே முதலிடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மொழிப் படம் ஒன்று சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ஜோதிகா நடித்துள்ள 'தம்பி' திரைப்படம் வரும் வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in