'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்

'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்
Updated on
1 min read

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இப்படத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனிகபூர்.

தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் போனி கபூர்.

'பிங்க்' ரீமேக்கை தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார் போனி கபூர். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ள இந்த ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அரசியலுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பவன் கல்யாண், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தில் ராஜு அறிவித்துள்ளார். இதில் இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார் என்றும், ஒரு அருமையான ட்யூன் கொடுத்திருப்பதாகவும் தில் ராஜு அறிவித்துள்ளார். 'பிங்க்' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in