பிரியங்கா ரெட்டி விவகாரம்: ஊடகங்களுக்கு நானி வேண்டுகோள்

பிரியங்கா ரெட்டி விவகாரம்: ஊடகங்களுக்கு நானி வேண்டுகோள்
Updated on
1 min read

பிரியங்கா ரெட்டி விவகாரத்தில் ஊடகங்களுக்கு நடிகர் நானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாகத் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி தனது ட்விட்டர் பதிவில் “ நாம் நீதி கேட்கக்கூட முடியாது. ஏனென்றால் இதைச் செய்தவர்களுக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் அது ஈடாகாது. (ப்ரியங்காவின்) ஆன்மா எப்படிச் சாந்தியடையும்.

நான் கடும் கோபத்தையும், கையாலாகாதது போலவும் உணர்கிறேன். இந்த விஷயத்தில் அவர் குடும்பத்தின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து நடக்குமாறு ஊடகங்களை வேண்டிக் கேட்கிறேன்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in