ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
Updated on
1 min read

ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதிக்கு என தனியிடம் உண்டு. தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார். இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? என்று யோசிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் கூட நடித்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

ஹீரோவாக உச்சத்தில் இருக்கும்போது வேறெந்த நடிகரும் தயங்கும் சிறப்புத் தோற்றம், வயதான தோற்றம், சிறிய கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் நட்புக்காக நடித்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 64’ படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துவரும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால், முதலில் அவர் சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கச் சொல்லிவிட்டார் விஜய். இதை அறிந்து நெகிழ்ந்து போயிருக்கிறார் விஜய் சேதுபதி. எனவே, விரைவில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள தெலுங்குப் படத்திலும் வில்லனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் விஜய் சேதுபதியைச் சந்தித்து கதைசொல்லப் போகிறார் சுகுமாறன்.

சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in