'நிசப்தம்' அப்டேட்: மாதவன் லுக் வெளியீடு

'நிசப்தம்' அப்டேட்: மாதவன் லுக் வெளியீடு
Updated on
1 min read

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் 'நிசப்தம்' படத்தில் மாதவன் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து கடைசியாக வெளியான படம் 'பாகமதி'. சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. தன் உடல் எடையைக் குறைக்க அவர் அதிக அக்கறை காட்டி வந்தார்.

உடல் எடையைக் குறைத்துவிட்டு, மீண்டும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான படம் 'சைலன்ஸ்'. ஹேம்நாத் மதுகார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் வசனமே இல்லாமல் உருவாகி வரும் படமாகும். அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழ்ப் பதிப்புக்கு 'நிசப்தம்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட நடிகர்களுடன் ஹாலிவுட் நடிகர்களும் அனுஷ்காவுடன் நடித்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் அனுஷ்காவின் லுக்கை வெளியிட்டுவிட்டது படக்குழு. நேற்று (அக்டோபர் 7) விஜயதசமியை முன்னிட்டு படத்தில் மாதவனுடைய லுக்கை வெளியிட்டுள்ளனர். ஆண்டனி என்ற நட்சத்திர இசையமைப்பாளர் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in