Published : 23 Sep 2019 01:17 PM
Last Updated : 23 Sep 2019 01:17 PM

சிரஞ்சீவி, ராம் சரண் மீது வழக்கு தொடர்ந்த நரசிம்மா ரெட்டி குடும்பத்தினர்

உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் சை ரா நரசிம்மா ரெட்டி தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. நரசிம்மா ரெட்டியின் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

நரசிம்மா ரெட்டி பற்றிய தகவல்களைத் தங்களிடமிருந்து பெற்றுவிட்டு அதற்காகத் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தங்கள் மீது பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றும் நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் கிட்டத்தட்ட 23 பேர் படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும், சிரஞ்சீவி மீதும் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த 23 பேரும் தலா 2 கோடி வீதம் மொத்தம் ரூ.50 கோடி வரை பணம் தர வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் தேஜாவிடம் நிர்பந்தித்துள்ளனர். ஹைதராபாத்தில் ராமசரணின் அலுவலகம் முன்பு இவர்கள் போராட்டம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், ராம சரண் பேசுகையில், "100 வருடங்கள் கழித்து ஒரு ஆளுமையைப் பற்றிக் கதை எழுதும்போது அது வரலாறு. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒருவரின் இறப்புக்கு 100 வருடங்கள் கழித்து, யார் வேண்டுமானாலும் அந்த நபர் பற்றி படம் எடுக்கலாம் என்று உள்ளது.

நரசிம்மா ரெட்டியின் குடும்பத்தினர் ஒரு சிலருக்கு உதவுவதன் மூலம் அவரது உயரத்தைக் குறைக்க விரும்பவில்லை. நான் உய்யாலவாடா மாவட்டத்துக்கும், அந்தக் கிராமத்துக்கும் உதவ விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

நரசிம்மா ரெட்டி குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் முகாந்திரத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x