அனுஷ்காவின் எடை பற்றிய விமர்சனம்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அனுஷ்காவின் எடை பற்றிய விமர்சனம்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Published on

நடிகை அனுஷ்காவின் எடையைப் பற்றி விமர்சித்த இணையதளத்தை நெட்டிசன்களும், அனுஷ்கா ரசிகர்களும் வறுத்தெடுத்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் தான் எடை குறைத்ததாக ஆஸ்ட்ரியாவிலிருந்து சில புகைப்படங்களை வெளியிட்டார் அனுஷ்கா. ஊட்டச்சத்து நிபுணர் ஒருவருடன் இணைந்து ஆரோக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அப்போது சொல்லியிருந்தார். அனுஷ்காவின் அந்தப் புகைப்படங்கள் வைரலாகின. சமீபத்தில் விமான நிலையத்திலிருந்து அனுஷ்கா வெளியே நடந்து வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி அதுவும் வைரலானது. ஆனால் இதில் அனுஷ்கா மீண்டும் பழைய கூடுதல் எடையுடன் காணப்பட்டார்.

இதைப் பார்த்து சில இணையதளங்கள், மீண்டும் அனுஷ்கா குண்டாகிவிட்டார், அவர் முகம் வீங்கிவிட்டது, தாடை தடிமனாக இருக்கிறது என்ற கருத்துடன் செய்திகள் வெளியாகின. ஒருவர் உடலை வைத்து அவரை விமர்சிப்பது தவறு என நெட்டிசன்கள் பலரும் அனுஷ்காவுக்கு ஆதரவாக, அந்தச் செய்தியையும், செய்தி வெளியிட்ட இணையதளத்தையும் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

நாவையும் அடக்கிப் பேசுங்கள், கைகளைக் கட்டுப்படுத்தி டைப் செய்யுங்கள், அவர் சுண்டு விரலுக்குக் கூட நீங்கள் ஈடாக முடியாது என்கிற ரீதியில் பலரும் அனுஷ்காவுக்கு ஆதரவாக கருத்துப் பகிர ஆரம்பித்தனர்.

2018ல் 'பாகமதி' வெளியானதிலிருந்தே அனுஷ்கா பெரிய அளவில் ஊடகங்களின் பக்கம் திரும்பாமலே இருக்கிறார். சிரஞ்சீவி நடிப்பில் 'சை ரா நரசிம்ம ரெட்டி'யில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ள 'சைலன்ஸ்' திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in